இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரியில் ரயில் மோதி உயர்தர மாணவன் பரிதாபச் சாவு!

படம்
சாவகச்சேரியில் ரயில் மோதி உயர்தர மாணவன் பரிதாபச் சாவு! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி ரயிலுடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் ரயில் பாதையை நடந்து கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நாளை பாடசாலையில் நடைபெறும் சோர்சல் நிகழ்வுக்கு ஆடைகளைத் தைக்கச் சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு நேர்ந்த சோகம்- கடலில் மூழ்கிப் பலி

படம்
திருகோணமலை – இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – பாசல்மாவத்த – ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மற்றுமொரு மாணவி மற்றும் ஆசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்கு சென்ற போது பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடியுள்ளார். இதன்போதே சிறுமி அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியுடன் நீரில் மூழ்கிய மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

படம்
நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு... நெல் பயிரிட முடியாத நிலங்களில், இடைப்போகத்தில் மேலதிகப் பயிராக பச்சைப்பயறு பயிர்ச் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.   கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெல் பயிரிட  முடியாத நிலங்களில் இடைப் போகத்தின் மேலதிக பயிராகப் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள், விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 23.01.2022

A - 68 என்ற மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் ஒரே நாளில் கடலில் கலந்த 150 கோடி தொன் நீர்!

படம்
A - 68 என்ற மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் ஒரே நாளில் கடலில் கலந்த 150 கோடி தொன் நீர்! A68 என்கிற மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால் ஒரே நாளில் 150 கோடி தொன் தண்ணீர் அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள மொத்த மக்கள் தொகையும் ஒரு நாளில் பயன்படுத்தும் நீரைப் போல 150 மடங்கு அதிக தண்ணீர் இதன்மூலம் ஒரே நாளில் கடலில் கலந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர். A68 உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக குறைந்த காலத்துக்கு இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த போது கிட்டத்தட்ட 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டில் அத்தனை பெரிய பனிப்பாறை காணாமல் போய்விட்டது. ஒரு டிரில்லியன் தொன் அளவிலான பனிப்பாறையை கரைந்துவிட்டது. தற்போது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் A 68 பனிப்பாறை சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஆராய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். A 68 பனிப்பாறை அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து, தெற்கு பெருங்கடல் வழியாக வடக்கு நோக்கி பயணித்து, தெற்கு அட்லாண்டிக் கடலை வந்தடைந்தது. லீட்ஸ் பல்கலைக்கழகத்த...

இது சீனாவில இல்ல ஸ்ரீ லங்காவில -பிரம்மிப்பூட்டும் -Drone Show (படங்கள்)

படம்
▶️இலங்கையில் முதல் முறையாக  Daraz நடாத்திய Drone Show இன்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இது இலங்கையருக்கு புது அனுபவமாக அமைந்துள்ளது. நாளை 23 ஆம் திகதியும் மாலை 6.30 முதல் 7.30 மணிவரை இங்கு காட்சிப்படுத்தல் இடம்பெறும்🔥

வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த கொரிய அரசு ஒத்துழைப்பு...

படம்
வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த கொரிய அரசு ஒத்துழைப்பு...                                                                           கொரியா தேசிய சபையின் சபாநாயகர்.                                                        வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று, அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக் (Park Byeong-Seug)  தெரிவித்தார். பார்க் பியோங்-சியோக் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. பார்க் பிய...

பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து

படம்
*பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து* கொழும்பு பொரளை பகுதி  குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பொரளை  கித்துல்வத்த பகுதியில் இன்று அதிகாலை  5 வீடுகளில் இவ்வாறு  தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீயை  கட்டுப்படுத்துவதற்காக   கொழும்பு மாநகரசபையின் 6  தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான  காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  மேலும்  தீவிபத்து காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.

கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரு கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் அழிந்தன.

படம்
கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரு கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் அழிந்தன.     கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒருபதியான மார்பக கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஒரு கோடி பெறுமதியான வைத்திய உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. #hospital #fire #kilinochchi   OUR PAGE கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரு கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் அழிந்தன (படங்கள்)   கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒருபதியான மார்பக கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஒரு கோடி பெறுமதியான வைத்திய உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. posted on  3 hours ago WORLD   NEWS   கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒருபதியான மார்பக கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஒரு கோடி பெறுமதியான வைத்திய உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் தீயணைப்பு ப...

முன்னாள் விமானப்படைத் தளபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்...

படம்
முன்னாள் விமானப்படைத் தளபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்... இலங்கை விமானப் படையின் முதல் விமானப்படைத் தளபதியான அமரர் ஓய்வுபெற்ற எயார் ஷீப் மார்ஷல் பத்மன் ஹரிப்பிரசாத மெண்டிஸ் அவர்களின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். கல்கிஸை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மலர்ச்சாலை ஒன்றில், இறுதி அஞ்சலிக்காக அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (19) முற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். ரோயல் லங்கா விமானப் படையின் ஐந்தாவது பயிற்சி அதிகாரியாகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த மெண்டிஸ் அவர்கள், பிரித்தானியாவில் விமானி ஆலோசகர் பதவி மற்றும் விமானப் பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சிகளைப் பெற்ற முதல் இலங்கையர் என்றும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 1971ஆம் ஆண்டில், ரோயல் லங்கா விமானப் படையின் நான்காவது விமானப்படைத் தளபதியாக ஹரிப்பிரசாத மெண்டிஸ் அவர்கள் நியமனம் பெற்றார். 1972ஆம் ஆண்டில், ரோயல் லங்கா விமானப் படையானது இலங்கை விமானப் படை...

ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமனம்...

படம்
ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமனம்... • பிரதமரின் செயலாளராக டீ.எம்.அநுர திசாநாயக்க அவர்கள் நியமனம்... • நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக கே.டபிள்யூ.ஐவன் டீ சில்வா நியமனம்... • 'அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களின் பங்கு அதிவிசாலமானது...'                                                                   ஜனாதிபதி தெரிவிப்பு  இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் அவர்கள், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அவர்களினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (19) முற்பகல், காமினி செனரத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.  இலங்கை நிர்வாகச் சேவையில் விசேட தர அதிகாரியான காமினி செனரத் அவர்கள், ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மேலதிகச் செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும்,...

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சாதீர்!

படம்
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சாதீர்! பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது. இதில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 48-52 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார். இவருடன், கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்பட்ட 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்தியப் பிரதமர் மோடிக்கான தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கை ஆவணத்தின் தமிழ் வடிவம்.

படம்
2ம் பகுதி  3ம் பகுதி  4ம் பகுதி  5ம் பகுதி  6ம் பகுதி  7ம் பகுதி  8ம் பகுதி  9ம் பகுதி  10 ம் பகுதி  11ம் பகுதி 

பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி சாதனை

படம்
  #வாழ்த்துக்கள் பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு  தங்கப்பதக்கம் தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து  குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில்   தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில்  வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார் இந்நிலையில் நேற்று(18) பாகிஸ்தான் லாகூரில்  இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50_55கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் இவரை பல்வேறு தரப்பினரும் பாரா...

இந்தியத் தூதுவரிடம் கடிதம் கையளிப்பு.

படம்
இன்று 18- 01-2022 இந்தியப் பிரதமருக்கு தமிழ்  தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் கெளரவ சம்பந்தன் தலைமையில் கையளிக்கப் பட்டது.  கெளரவ சம்பந்தன், கெளரவ நீதியரசர் விக்னேஸ்வரன், திரு.மாவை சேனாதிராஜா, கெளரவ செல்வம் அடைக்கலநாதன், திரு. சுரேக்ஷ் பிரேமசந்திரன், கெளரவ சுமந்திரன் திரு சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாக இவ்விடயம் கருதப்படுகிறது.

உலக சாதனை. இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன்.

படம்
உலகில் முதலாவதாக மரத்தில் மிகச்சிறிய (6mm) சிவலிங்கத்தை 26 நிமிடம் 10 செக்கனில் செதுக்கி  இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஜனா சுகிர்தன் உலக சாதனை படைத்து உள்ளார். #SL #LKA #SriLanka #Ampara #Kalmunai #Pandiruppu #Lingam

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.

படம்
இன்று பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சாரம் துண்டிப்பு இன்றைய தினத்திற்குள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்காவிட்டால் பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் மின்சார தேவையில் 70 சதவீதமான உற்பத்தி அனல் மின்நிலையங்கள் ஊடாகவே பூர்த்தி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார். 22 சதவீத மின்சாரம் நீர் மின் உற்பத்தி ஊடாக விநியோகிக்கப்படுகின்றது. சகல மின் உற்பத்தி நிலையங்களும் டீசல் மூலமே இயங்குகின்றன. களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும். நெப்டா தற்போது முழுமையாக தீர்ந்துள்ளது. இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது. அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, வழங்க முடியாத நிலை ஏற்படும். இதுவொரு பாரிய பிரச்சினையாகும். அதேநேரம், சப்புகஸ்கந்தை, நிலையத்திற்கான எரிபொர...

9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை.

படம்
• “நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெல்ல ஒன்றிணையுங்கள்...” • “குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டுவதை நிறுத்துங்கள்…” 9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி தெரிவிப்பு... •  சவால்களுக்கு மத்தியிலும் அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டவில்லை… •  பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமையளித்தோம்… •  பாதாள உலகக் கோஷ்டி மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளை முற்றாக இல்லாதொழிப்போம்… • எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை என்பதைப் பொறுப்புடன் தெரிவிக்கிறேன்… •  அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்… • அரசியல் நோக்கங்களுக்காக வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த வேண்டாம்… •  உயர்தர அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க பாராளுமன்றத்தில் விவாதங்களை நடத்துங்கள்… •  வரலாற்றில் எதிர்கொண்ட அனைத்துச் சவால்களும் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வெற்றி கொள்ளப்பட்டு...

அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் ; 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி.

படம்
அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் ;  2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி அபுதாபியில் டுரோன் மூலம் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஈரானை சேர்ந்த ஹவுத்தி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் டுரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 எண்ணெய் டாங்கர்கள் தீப்பிற்றி வெடித்து சிதறின.  விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது.

கொழும்பு - கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்மீரிகம - குருநாகல் பகுதி திறப்பு...

படம்
கொழும்பு - கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பகுதி திறப்பு... •  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அவ்வாறே நிறைவேற்றப்படும்... • விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் என்று உறுதி... • அபிவிருத்தியின் பங்காளிகளாவதற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு... • பொய்ப் பிரசாரங்களால் மனம் தளரவேண்டாம்... - ஜனாதிபதி தெரிவிப்பு.... “செயல்களினூடாகவே விமர்சனங்களுக்கு பதிலளிக்கப்படும்...”             - பிரதமர் தெரிவிப்பு... கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால், இன்று (15) பிற்பகல் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. 40.91 கிலோமீற்றர்களைக் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான “அத்துகல்புர நுழைவு”, மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய 05 இடமாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியை நிர்மாணிப்பதற்கு, அரசாங்கம் 149 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. அனைத்து நிர்மாணப்...

கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

படம்
எரிமலை வெடித்ததில் டொங்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !! பசுபிக் சமுத்திரம் சார்ந்த ஏனைய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து டொங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்கா நாட்டில் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. டொங்காவின் அனைத்து பகுதிகளிலும் சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது...

பிரதமரின் தலைமையில் தேசிய தைப் பொங்கல் விழா...

படம்
பிரதமரின் தலைமையில் தேசிய தைப் பொங்கல் விழா... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நேற்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதம் முதல் நாள் இவ்வாறு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமரின் ஆலோசனைக்கமைய இம்முறை தைப்பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழா இந்து கலாசார அம்சங்களுடன் நடைபெற்றதுடன், பிரதமருடன், பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவும் விழாவில் கலந்து கொண்டார். நிகழ்வில் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவிகளின் நடன நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இதன்போது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அச்சிடப்பட்ட இந்து அறநெறி பாடசாலை மாணவர்களிற்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான புத்தகங்கள் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவின் மாணவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது. கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத...

குருநாகல், மீரிகம எக்ஸ்பிரஸ் வீதி இன்று (15) திறக்கப்படுகிறது.

படம்

🚨 சற்று முன்🚨 வவுனியா- திருகோணமலை வீதியில் விபத்து: 13 பேர் காயம்.

படம்
வவுனியா- திருகோணமலை வீதியில் விபத்து: 13 பேர் காயம் வவுனியா – திருகோணமலை வீதியின் கெபித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 13 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கெபித்திகொல்லாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.