இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு.

படம்
வரலாறு காணாத வெள்ளம் பிரேசிலில் வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் தொகை 146-ஆக உயர்வு; 191 பேரை காணவில்லை! பிரேசில் - மெட்ரோபோலிஸ் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. பேரழிவுகள் ஏற்பட்டு 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்து 191 பேர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, காணாமல் போனவர்களை தேடி, மீட்கும் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டுள்ளதாக பிரேசிலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக அவசரக் குழுக்கள் சனிக்கிழமை பலமுறை தங்கள் மீட்புப் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் வெள்ளம், மண்சரிவில் சிக்கி காணாமல் போன யாரேனும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை தளர்ந்து உள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அனர்த்தங்களில் சிக்கி இறந்தவர்களில் 27 சிறுவர்களும் அடங்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் 900-க்கும் மேற்பட்டோர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை அடர்த்தியான மூடுபனிக்கு மத்தி...

IPL ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த வர்ணனையாளர்

படம்
IPL ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த வர்ணனையாளர்! ஆரம்ப தொகை 1கோடி கணிக்கப்பட்ட இலங்கை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு 10.75 கோடி வரை ஏலம் சென்றுக் கொண்டிருந்த போதே வர்ணனையாளர் தீடிரென மயங்கி விழுந்துள்ளார்.

🖲🖲🖲ஹங்வெல்ல தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் பாரிய தீ பரவல்🖲

படம்
ஹங்வெல்ல தின்னர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவல்-! ஹங்வெல்ல – தும்கொலஹேனவில் உள்ள தின்னர் (Thinner) உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது... தீயை அணைக்க 5தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலதீக தகவல்கள் விரைவில்.

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்ற விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இனிதே இடம்பெற்றது.

படம்
வலி.மேற்கு சங்கானை  j/180 கிராம சேவகர் பிரிவில் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் "ஒரு இலட்சம் பணிகள்" அங்குரார்ப்பண நிகழ்வுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இனிதே இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத்திட்டத்தின்படி,  மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் கண்காணிப்பில், மாண்புமிகு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலில்,  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இச் செயற்பாட்டின் ஓர் அங்கமாக இந் நிகழ்வு  சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின்  விளையாட்டு மைதான வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மதத்தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி, சமுர்த்தி, கிராம உத்தியோகஸ்தர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக நலன் விரும்பிகளின், இளைஞர் மன்ற அங்கத்தவர்களின் பங்குபற்றல் மற்றும் வழிகாட்டலில் நடைபெற்றுள்ளது. கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே த...