யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்ற விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இனிதே இடம்பெற்றது.

வலி.மேற்கு சங்கானை  j/180 கிராம சேவகர் பிரிவில் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் "ஒரு இலட்சம் பணிகள்" அங்குரார்ப்பண நிகழ்வுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இனிதே இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத்திட்டத்தின்படி, 

மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் கண்காணிப்பில்,

மாண்புமிகு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலில், 

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இச் செயற்பாட்டின் ஓர் அங்கமாக இந் நிகழ்வு 

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின்  விளையாட்டு மைதான வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மதத்தலைவர்கள்,
பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி, சமுர்த்தி, கிராம உத்தியோகஸ்தர்கள், அரசியல் பிரதிநிதிகள், சமூக நலன் விரும்பிகளின், இளைஞர் மன்ற அங்கத்தவர்களின் பங்குபற்றல் மற்றும் வழிகாட்டலில் நடைபெற்றுள்ளது.


கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தேசத்தின் நிலையான அபிவிருத்திக்கு அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு, எமது அரசாங்கத்தால் ஒவ்வொரு கிராமங்களுக்கும் தலா 3 மில்லியன் ரூபாய் நிதியானது, 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக கிராமத்தின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி என்பன எதிர்காலத்தில் வளர்ச்சிப்போக்கை எட்டவுள்ளது. கிராமங்கள் வளர்ச்சியடைந்தால், மக்களின் பொருளாதாரம் மேம்படும், அதனூடாக மாவட்டமும் நாடும் பொருளாதார மீட்சியை பெற்றுக்கொள்ளும்.

நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.