யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார்.

இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார்.

முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் உல்லாச நடைபாதை சில தினங்களுக்கு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகாத்திடலில் ஜனாதிபதி செயலத்திற்கு எதிரில் உள்ள முகப்பின் ஊடாக இதற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.