யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

நெல் பயிரிட முடியாத நிலங்களில், இடைப்போகத்தில் மேலதிகப் பயிராக பச்சைப்பயறு பயிர்ச் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.  

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெல் பயிரிட  முடியாத நிலங்களில் இடைப் போகத்தின் மேலதிக பயிராகப் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள், விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
23.01.2022

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.