இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்
பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த  பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது. உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 🚨யாழ் பல்கலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில் யாழ் பல்கலையில் இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவி தனுஜா என்பவர் சற்றுமுன்னர் யாழ்பாண பலகலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  வீட்டிலிருந்து பலகலைக்கழகம் செல்வதாக கூறி யாழ்ப்பணம் வந்த குறித்த மாணவி தனது அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு காற்றாடியில் துணி மாட்டி தற்கொலை செய்துள்ளார...

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படம்
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய ரயில்  Alawwa ரயில் நிலையத்துக்கு அண்மையில் Gorokgasdeniya  உள்ள வீதி புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் லொறியின்  சாரதி படுகாயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

CEYPETCO: எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!!

படம்
CEYPETCO: எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!! இன்று (19) முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது. அதற்கமைய பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 254 இருந்து ரூ. 338 (ரூ. 84 ஆல்) ஒக்டேன் 95: ரூ. 283 இருந்து ரூ. 373 (ரூ. 90 ஆல்) டீசல் ஒட்டோ டீசல்: ரூ. 176 இருந்து ரூ. 289 (ரூ. 113 ஆல்) சுப்பர் டீசல்: ரூ. 254 இருந்து ரூ. 329 (ரூ. 75 ஆல்)அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே நேற்று நள்ளிரவு (18) முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின் முழு வடிவம்

படம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின் முழு வடிவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வெளியேறுமாறு கோசங்கள் எழுப்பப்படுகின்றமையானது நாட்டின் ஜனநாயகத்தினை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுச் செல்லும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். அத்துடன், சேதனப்பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல என சுட்டிக்காட்டிய பிரதமர் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

படம்
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவிட சென்ற உத்தியோகத்தர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு.

படம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்கள் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25 அகவையுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் என்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.   05.04.2022 இன்று மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக சென்றவேளை படகு கவிழ்ந்துள்ளது சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து உடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள்   சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில்

படம்
இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில்  இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோருடன் தாமும் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இது தொடர்பாக கலந்துரையாடியதாக விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் நாட்டை ஆள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அடுத்த வாரத்திற்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து அரச பொறுப்புகளையும் இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உடன்பாடில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ச...

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

படம்
இராஜினாமா கடிதத்தை கையளித்தார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க! மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான இவர், மே மாதம் முதலாம் திகதியில் இருந்து, தனது பதவியை இராஜினாமா செய்துகொள்வதாக குறிப்பிட்டு, கடிதத்தை கையளித்துள்ளார். விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் தனது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 7 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த அவர், தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

யாழில் உள்ள தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

படம்
யாழில் உள்ள தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு! யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகரை சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் குறித்த நபர் நீச்சல் தடாகத்தில் சடலமாக காணப்படுவதனை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலீசாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். குறித்த சம்பவம் கொலையா இல்லையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்