யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.
யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🚨யாழ் பல்கலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில் யாழ் பல்கலையில் இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவி தனுஜா என்பவர் சற்றுமுன்னர் யாழ்பாண பலகலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
வீட்டிலிருந்து பலகலைக்கழகம் செல்வதாக கூறி யாழ்ப்பணம் வந்த குறித்த மாணவி தனது அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு காற்றாடியில் துணி மாட்டி தற்கொலை செய்துள்ளார். மாணவியை காணவில்லை என விடுதியை தேடி மாணவர்கள் சென்று பார்த்தபோது கதவு தாழ்ப்பாளிடப்பட்டுள்ளது.
எனவே உடைத்து உள்ளே பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தற்கொலை தொடர்புக்கு காதல் தொடர்பெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக