யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவிட சென்ற உத்தியோகத்தர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்கள் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

25 அகவையுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் என்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

 
05.04.2022 இன்று மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக சென்றவேளை படகு கவிழ்ந்துள்ளது சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து உடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள்

 
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.