யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின் முழு வடிவம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையின் முழு வடிவம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.

இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வெளியேறுமாறு கோசங்கள் எழுப்பப்படுகின்றமையானது நாட்டின் ஜனநாயகத்தினை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுச் செல்லும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அத்துடன், சேதனப்பசளை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல என சுட்டிக்காட்டிய பிரதமர் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் உர மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.