யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

இராஜினாமா கடிதத்தை கையளித்தார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான இவர், மே மாதம் முதலாம் திகதியில் இருந்து, தனது பதவியை இராஜினாமா செய்துகொள்வதாக குறிப்பிட்டு, கடிதத்தை கையளித்துள்ளார்.

விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் தனது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

7 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த அவர், தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.