யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.