யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு.

வரலாறு காணாத வெள்ளம்

பிரேசிலில் வெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் தொகை 146-ஆக உயர்வு; 191 பேரை காணவில்லை!

பிரேசில் - மெட்ரோபோலிஸ் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

பேரழிவுகள் ஏற்பட்டு 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்து 191 பேர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போனவர்களை தேடி, மீட்கும் பணிகள் சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டுள்ளதாக பிரேசிலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக அவசரக் குழுக்கள் சனிக்கிழமை பலமுறை தங்கள் மீட்புப் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் வெள்ளம், மண்சரிவில் சிக்கி காணாமல் போன யாரேனும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை தளர்ந்து உள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அனர்த்தங்களில் சிக்கி இறந்தவர்களில் 27 சிறுவர்களும் அடங்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் 900-க்கும் மேற்பட்டோர் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை அடர்த்தியான மூடுபனிக்கு மத்தியிலும் இடிபாடுகள் மற்றும் சகதிகள் வழியாக மண்ணை தோண்டி தேடும் பணிகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தன்னார்வத் தொண்டர்களும் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றனர்.

ஆபத்தான பகுதிகளில் 41 மோப்ப நாய்கள் மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றன.

கனரக இயந்திரங்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. இருக்கும் வளங்களைக் கொண்டே மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம் என மெட்ரோபோலிஸ் நகர தீயணைப்புத் துறை சிறப்பு மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்டோ அமரல் தெரிவித்துள்ளார்.

மிக மோசமான பாதிப்புக்குள்ளான மலைப்பகுதி ஒன்றில் மட்டும் 80 வீடுகள் வரை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, போரால் பேரழிவுகளை சந்தித்த பகுதி போன்று நகரம் காணப்படுவதாக தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.