இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரியில் ரயில் மோதி உயர்தர மாணவன் பரிதாபச் சாவு!

படம்
சாவகச்சேரியில் ரயில் மோதி உயர்தர மாணவன் பரிதாபச் சாவு! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி ரயிலுடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் ரயில் பாதையை நடந்து கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நாளை பாடசாலையில் நடைபெறும் சோர்சல் நிகழ்வுக்கு ஆடைகளைத் தைக்கச் சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு நேர்ந்த சோகம்- கடலில் மூழ்கிப் பலி

படம்
திருகோணமலை – இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – பாசல்மாவத்த – ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மற்றுமொரு மாணவி மற்றும் ஆசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்கு சென்ற போது பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடியுள்ளார். இதன்போதே சிறுமி அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியுடன் நீரில் மூழ்கிய மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

படம்
நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு... நெல் பயிரிட முடியாத நிலங்களில், இடைப்போகத்தில் மேலதிகப் பயிராக பச்சைப்பயறு பயிர்ச் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.   கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெல் பயிரிட  முடியாத நிலங்களில் இடைப் போகத்தின் மேலதிக பயிராகப் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள், விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 23.01.2022

A - 68 என்ற மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் ஒரே நாளில் கடலில் கலந்த 150 கோடி தொன் நீர்!

படம்
A - 68 என்ற மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் ஒரே நாளில் கடலில் கலந்த 150 கோடி தொன் நீர்! A68 என்கிற மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால் ஒரே நாளில் 150 கோடி தொன் தண்ணீர் அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள மொத்த மக்கள் தொகையும் ஒரு நாளில் பயன்படுத்தும் நீரைப் போல 150 மடங்கு அதிக தண்ணீர் இதன்மூலம் ஒரே நாளில் கடலில் கலந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர். A68 உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக குறைந்த காலத்துக்கு இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த போது கிட்டத்தட்ட 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டில் அத்தனை பெரிய பனிப்பாறை காணாமல் போய்விட்டது. ஒரு டிரில்லியன் தொன் அளவிலான பனிப்பாறையை கரைந்துவிட்டது. தற்போது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் A 68 பனிப்பாறை சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஆராய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். A 68 பனிப்பாறை அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து, தெற்கு பெருங்கடல் வழியாக வடக்கு நோக்கி பயணித்து, தெற்கு அட்லாண்டிக் கடலை வந்தடைந்தது. லீட்ஸ் பல்கலைக்கழகத்த...

இது சீனாவில இல்ல ஸ்ரீ லங்காவில -பிரம்மிப்பூட்டும் -Drone Show (படங்கள்)

படம்
▶️இலங்கையில் முதல் முறையாக  Daraz நடாத்திய Drone Show இன்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இது இலங்கையருக்கு புது அனுபவமாக அமைந்துள்ளது. நாளை 23 ஆம் திகதியும் மாலை 6.30 முதல் 7.30 மணிவரை இங்கு காட்சிப்படுத்தல் இடம்பெறும்🔥

வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த கொரிய அரசு ஒத்துழைப்பு...

படம்
வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த கொரிய அரசு ஒத்துழைப்பு...                                                                           கொரியா தேசிய சபையின் சபாநாயகர்.                                                        வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று, அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக் (Park Byeong-Seug)  தெரிவித்தார். பார்க் பியோங்-சியோக் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. பார்க் பிய...

பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து

படம்
*பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து* கொழும்பு பொரளை பகுதி  குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பொரளை  கித்துல்வத்த பகுதியில் இன்று அதிகாலை  5 வீடுகளில் இவ்வாறு  தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீயை  கட்டுப்படுத்துவதற்காக   கொழும்பு மாநகரசபையின் 6  தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான  காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  மேலும்  தீவிபத்து காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.