யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவுயர் அபாயத்தில் பத்திரிகை துறை...


அதிவுயர் அபாயத்தில் பத்திரிகை துறை...

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்படி டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதனால், செய்தித்தாள்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன், பத்திரிக்கை தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.