யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்கானை மண்டிகைகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.


குறித்த நபர் பஸ் நடத்துனராக செயற்படுவதாகவும். கடந்த சில நாட்களிற்கு முன் காணாமல் போய்யுள்ளதாகவும் அறியமுடிகிறது. இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விபரங்கள் 👇👇👇👇👇

சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.

மாதகல் - யாழ்ப்பாணம் சிற்றுந்து சாரதியும் பேருந்து உரிமையாளருமான, கடற்கரை வீதி மாதகலை சேர்ந்த குணபாலசிங்கம் கடம்பகுமார் (வயது 42) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த அவரது சடலம் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.