யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் திருக்கோணமலையில்..!!!

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் திருக்கோணமலையில்..!!!

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் ஒன்று (Foreign Ministry – Regional Consular Office) திருக்கோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.

அதாவது வெளிநாடுகளுக்கு செல்ல வீசா அனுமதியை பெறும்பொருட்டு தூதரகங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் வெளிநாட்டு அமைச்சில் சான்றுறுதிப்படுத்த (Document Attestation) வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை திருக்கோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் செய்துகொள்ள முடியும்.

அதாவது பேச்சுவழக்கில் ‘Foreign Ministry seal அடித்தல்’ என்று சொல்லப்படும் ஆவண சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் நிர்கதியான நிலையில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவரல், வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்களை கொண்டுவருதல், வெளிநாடு ஒன்றில் இருந்து வரவேண்டிய நஷ்டஈடு மற்றும் பெறுவனவுகளை பெறல் போன்ற சேவைகளை இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை. அனைத்துவிடயங்களையும் திருக்கோணமலை அலுவலகத்தில் நிறைவேற்றி கொள்ளமுடியும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.