யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோதல்; கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோதல்; கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 29வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ - ஹொரகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகில் நேற்றிரவு (20) ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த குறித்த இளைஞருக்கும், அங்கிருந்த ஓட்டோ சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூரிய ஆயுதமொன்றினால் இளைஞர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞர், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

ஓட்டோ சாரதி தலைமறைவாகி உள்ள நிலையில், அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.