யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முறிகண்டியில் விபத்து! புதுக்குடியிருப்பு பிரதேச சபை சாரதி பலி மேலும் மூவர் படுகாயம்.

முறிகண்டியில் விபத்து! 

புதுக்குடியிருப்பு பிரதேச சபை சாரதி பலி மேலும் மூவர் படுகாயம்

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கழிவகற்றும் உழவு  இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது.
குறித்த விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பத்தர் சம்பவ இடத்தில் உயிரித்துள்ளார். இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.

படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர்காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற நேரத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் காயமடைந்தவர்களை அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி வருகை தந்தமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.