யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் தந்தை , மகன் பலி - பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்…!

விபத்தில் தந்தை , மகன் பலி - பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்…!

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து - மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் 

வவுனியா - மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிள் ஏற முற்பட்டுள்ளது இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது 

இவ்விபத்தில் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிழந்துள்ளார் 

இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர் 

இதனால் அப்பகுதில் பதட்ட நிலமை நிலவியதுடன் பூவரசங்குளம் பொலிஸார் நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் 

இவ் விபத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.