யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி

அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பபாடசாலைமாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஐந்து முதல் 11 வயது மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் துப்பாக்கி பிரயோகம் வழமைக்கு மாறான விடயம் என்பதால் இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் ஆரம்பித்ததும் அருகிலிருந்த அமெரிக்க எல்லை காவல்படையினர் அந்த பகுதிக்கு விரைந்து அந்த நபரை சுட்டுக்கொன்றனர் என ஏபி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நபர் பாடசாலைமீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் கைத்துப்பாக்கி மற்றும்  ஏஆர்15 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் தனியாக இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்
அருகில் உள்ள மருத்துவமனைகளில் பல சிறுவர்கள் துப்பாக்கி காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.