யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு...


இந்திய பழங்குடியினத்தைத் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானார்!
-------------------------------------------------------------------------
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு (Draupadi Murmu) தேர்வானார். 

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரைத் 
தேர்வு செய்வதற்காக ஜூலை 18ம் நாள் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், பெரும்பாண்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார்.

இதன் மூலம் இந்திய வரலாற்றில் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவி என்ற பெருமையை பெற்று உள்ளார்.

ஓடிசா மாநிலத்தின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் பிறந்த திரௌபதி முர்மு,
இருபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் செயற்பட்டுவரும் இவர், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார்.

அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு இரண்டு தடவை, ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.

கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாரதீய ஜனதாக் கட்சியும், பிஜு ஜனதா தளம் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தபோது அமைச்சராக பதவியேற்ற முர்மு, ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. எனினும் பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு பின்னர் வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.