யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி!

கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி!

கொழும்பில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரதி ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காரொன்றில் சாரதியொருவர் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கார் தரித்து நின்ற பகுதியில் கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்துள்ளது.
இதன்போது கட்டிட நிர்மாணப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் குழாய்யொன்று மேலிருந்து கீழ்நோக்கி காரின் மீது வீழந்துள்ளதில் காரின் முன்பக்க கண்ணாடியை துழைத்துக்கொண்டு சாரதியின் இருக்கையை நோக்கி வந்துள்ளது.

இந்நிலையில் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.