யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு.

கொழும்பு கடவத்தை வெளிவட்ட வீதியில்  16 ஆம் கிலோமீற்றர் சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணித்த லொறியுடன் பின்னால் வேகமாக பயணித்த கார் மோதியதில் கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

டைல்ஸ் ஏற்றப்பட்ட லொறி மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே திசையில் பின்னால் வந்த சொகுசு கார் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை பகுதியை  சேர்ந்த கிதானி மானெல் பிரியந்தி (வயது 47) என்ற ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியராவர். 
 
லொறி மீது கார் மோதியதால் கார் மோசமாக சேதமடைந்ததுடன் காரின் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கார் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.