யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சியின் போது ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்களுக்கு என்ன நடந்தது? -சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

நல்லாட்சியின் போது ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிலுநர் உதவியாளர்களுக்கு என்ன நடந்தது?"

கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 7,500 பேரை பயிலுநர் திட்ட உதவியாளர்களாக நியமிக்கும் திட்டத்தை ஆரம்பித்ததாகவும்,இதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் 6,547 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் எனவும்,அப்போது தேர்தல் அறிவிப்பு வெளியானதால்,தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும்,ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில்,மீண்டும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது நிலையில், அதன் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.


"යහපාලන සමයේ බඳවා ගැනීමට නිර්දේශ කළ පුහුණු ව්‍යාපෘති සහයකයින්ට මොකද වුණේ?"

What happened to the Trainee Project Assistant recruitments which planned in Yahapalana government ?

During the yahapalana government time there was programme to recruit 7500 trainee project assistants. Though the interviews 6547 have been selected ,Due to the Elections the appointment's were  temporarily  halted. The Election commission has announced after the Presidential Election the appointments could be given. Mr Premadasa questioned the progress of those appointments .


இடைநிறுத்தப்பட்ட எமது நியமனத்தைப் பெற்றுதருமாறும், எமக்காக அனைத்து அரசியல்வாதிகளும் குரல்கொடுக்குமாறும்  பணிவோடு வேண்டிக்கொள்கின்றோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.