யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயற்திட்ட உதவியாளர்கள் [PROJECT ASSISTANTS] ஆகிய எமக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்?

செயற்திட்ட உதவியாளர்கள் [PROJECT ASSISTANTS] ஆகிய எமக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்?

"යහපාලන සමයේ බඳවා ගැනීමට නිර්දේශ කළ පුහුණු ව්‍යාපෘති සහයකයින්ට මොකද වුණේ?"

What happened to the Trainee Project Assistant recruitments which planned in Yahapalana government 

During the yahapalana government time there was programme to recruit 7500 trainee project assistants. Though the interviews 6547 have been selected ,Due to the Elections the appointment's were  temporarily  halted. The Election commission has announced after the Presidential Election the appointments could be given. Mr Premadasa questioned the progress of those appointments .

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குங்கள் 

 நாடு முழுவதும் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பிரதமரின் அலரி மாளிகையில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம் பெற்று புரட்டாதி மாதம் 16ம் திகதி (2019.09.16) அகில இலங்கை ரீதியாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்திற்கு 6547 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளினது பெயர்ப் பட்டியல் நாடு முழுவதிலுமுள்ள மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் நிமித்தம் அனைவரும் தமது மாவட்ட செயலகங்களுக்குச் சென்று வரவு இடாப்பில் கையொப்பம் இட்டு வந்தோம். மாவட்ட செயலகங்களினால் அவரவரது பிரதேச செயலகங்களுக்கு சில நியமனதாரிகள் கடமையை பொறுப்பேற்குமாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு நியமனதாரிகள் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் 2019.09.18ம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருப்பதனால் 2019.09.23ம் திகதியன்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தற்காலிகமாக இந் நியமனங்கள் இடைநிறுத்தப்படுவதாக அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் தொலைநகல் ஊடாக சுற்று நிரூபம்; அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் 2019.09.18ம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியாகவும் நியமனம் வழங்கப்பட்ட திகதி 2019.09.16ம் திகதி ஆகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் 2019.11.18ம் திகதியன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட எங்களது பணிகளை மீள தொடர்வதற்கு எங்களது மாவட்ட செயலகத்திற்குச் சென்றிருந்தோம். கௌரவ தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரினால் எமது நியமனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டு மீண்டும் நியமனதாரிகளை பணிக்கு அமர்த்துமாறு தொலைநகல் ஊடாக சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த அமைச்சினால் இந் நியமனம் பற்றி ஒரு தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. பின்னர் இந் நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இந்த நியமனத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கடிதம் மூலமும் ஊடக சந்திப்புக்களின் மூலமும் அரசிற்கு வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு பதில்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் 6547 பேரின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. சுமார் 03 வருடங்களாக  வேலையின்றி எமது வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கின்றோம். இன்றைய அசாதாரண சூழ்நிலையில் எம்மில் பலர் பல்வேறு சமூக ரீதியான அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர். முன்னர் செய்த தொழில்களும் இல்லை. இத் தொழிலும் கிடைத்தபாடில்லை. 6547 குடும்பங்களின் வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

குறித்த அமைச்சினால் நியமனம் பெற்ற நாங்கள் உங்களது கண்காணிப்பின் கீழ் எமது மாவட்ட செயலகங்களுக்கு சேவைக்காக நியமிக்கப்பட்ட நாம் இன்று வரை சேவையை தொடர முடியாது உள்ளோம். இத்தொழிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எங்களினதும் எங்கள் குடும்பங்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் இதனைப் பெற்றுத் தருவதற்கு  எமக்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தரும் வகையில் ஆவன செய்து தருமாறு தாழ்மையுடன் அகில இலங்கை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் வேண்டி நிற்கின்றோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.