யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் பயங்கர தீ விபத்து12000 அகதி குடியிருப்புகள் நாசம்.


பங்களாதேஷில் பயங்கர தீ விபத்து
12000 அகதி குடியிருப்புகள் நாசம்

பங்களாதேஷில், மியன்மாரின் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த முகாமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 2,000 குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன. 

இதனால் சுமார் 12,000 பேர் தங்குமிடங்களை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குட்டுபலோங் நகரிலுள்ள அகதிகள் முகாமில்  நேற்று பிற்பகல் இத்தீ பரவ ஆரம்பித்தது. 

இத்தீயினால் 2000 குடியிருப்புகள் தீக்கிரையாகி அழிந்துள்ளதாகவும், 12,000 பேர் தங்குமிடங்களை இழந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பங்களாதேஷின் அகதிகள் ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்தபட்சம் 35 பள்ளிவாசல்கள், 21 கற்கை நிலையங்களும் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

2021 ஜனவரி முதல் 2022 டிசெம்பர் வரை ரோஹிங்யா அதிகள் முகாமில் 222 தீப்பரவல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பங்களாதேஷ் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இவற்றில் 60 சம்பவங்களில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருந்ததாகவும் அவ்வமைச்சு தெரிவித்திருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.