யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலசேற்றுப் பகுதி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது..!


கண்டி, அலவத்துகொட 
பிரதேசத்தில் உள்ள வயல் நிலசேற்றுப் 
பகுதி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் 
இளம் பெண்ணொருவரின் சடலம்  
கண்டெடுக்கப்பட்டுள்ளது..!

(25) வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது உடல் வீட்டிலிருந்து சுமார் 
100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் புதைக்கப்பட்டுள்ளது.

அலாவத்துகொட விளான பல்லேகம அல்லேகடே பகுதியில் வசிக்கும் தனுக வதுவந்தி ஜயதிலக்க என்ற (25) வயதுடைய திருமணமான பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு கிராமத்தில் உள்ள மரண வீட்டிற்கு சென்று திரும்பிய போது மனைவி வீட்டில் இல்லை எனவும் கணவர் குழந்தைகள் #
இல்லை தாங்கள் தனியாக வீட்டில் வசித்து வருவதாக பொலிசாரியிடம் தெரிவித்துள்ளார்.

 இதனையடுத்து  இந்த கொடூர கொலை சம்பவதில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை விசாரித்து வருகிறார்கள் எனவே சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  அலவத்துகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.