யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான பாட ஆசிரியர் வீ. பரனீதரன் பதுளையில் ஏற்பட்ட கார் விபத்தில் பலி!!

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.