யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்?

யாழில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்?

யாழ்.மாவட்டத்திற்கு மேல் இன்று சனிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்க உள்ள நிலையில் மாவட்டத்தில் வெப்பநிலை 37 பாகையைத் தாண்டி அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் மற்றும் மிருசுவில் பகுதிகளுக்கு மேல் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில் இப்பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகலாம் என இலங்கை வளிமண்டலத் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய வானிலை அதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம்கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

சூரியனின் நீள் வட்டப்பாதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் தென் துருவத்தில் இருந்து வட துருவம் நோக்கி சூரியன் உச்சம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் ஆரம்பித்து கடந்த புதன்கிழமை அனுராதபுரம் மன்னார் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுத்த நிலையில் தொடர்ச்சியாக நகர்வடைந்து முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நேற்று உச்சம் கொடுத்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு சூரியன் உச்சம் கொடுக்க உள்ளது. நல்லூர் மற்றும் மிருசுவில் பகுதிகளுக்கு மேலாக இன்று சூரியன் உச்சம் கொடுத்து இலங்கையை விட்டு வெளியேறும் என தர்மலிங்கம் பிரதீபன் கூறினார்.

இந்நிலையில் இன்று மற்றும் அடுத்து வரும் நாட்களில் யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை 37 பாகையை தாண்டக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளன. அக்காலப் பகுதியில் இடியுடன் கூடிய மழையோ அல்லது மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.