இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு

படம்
🔴உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குள் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்களத்தில் பஸ் வண்டிக்கும் தீ வைப்பு!

படம்
நாட்டின் ஜனாதிபதி என்றும் பாரமால் "பைத்தியக்காரானே வெளியே வா!!" என்று பொது மக்கள் கூக்குரலிடுமளவுக்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. இராணுவ வாகனம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.  அந்த தொடரில், மிரிஹானவில் தொடங்கிய போராட்டம் களனி, கொழும்பு-கண்டி வீதி, அமைச்சர்களின் வீடுகள் என்று விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது.... பிந்திய செய்திகளின் படி தற்போது நுகேகொட உள்ளிட்ட கொழும்பின் பல்வேறு பிரதேசங்களில் கேர்பியூ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஞாயிறு வரை நாடு தாங்காது, மக்கள் பொறுக்க மாட்டார்கள் போல் இருக்கிறது நாட்டு நிலமை.

மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்.

படம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முறிகண்டியில் விபத்து! புதுக்குடியிருப்பு பிரதேச சபை சாரதி பலி மேலும் மூவர் படுகாயம்.

படம்
முறிகண்டியில் விபத்து!  புதுக்குடியிருப்பு பிரதேச சபை சாரதி பலி மேலும் மூவர் படுகாயம் முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கழிவகற்றும் உழவு  இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது. குறித்த விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பத்தர் சம்பவ இடத்தில் உயிரித்துள்ளார். இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர். படுகாயமட...

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்...

படம்
ஐந்து முக்கிய விடயங்களின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்... • நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்....                                                                                        ஜனாதிபதி... • ஐக்கிய இலங்கையில் அனைத்து இனங்களையும் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வோம்...                                                                  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். “நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்”  என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரினதும் தல...

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோதல்; கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!

படம்
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோதல்; கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் பலி! எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 29வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ - ஹொரகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகில் நேற்றிரவு (20) ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த குறித்த இளைஞருக்கும், அங்கிருந்த ஓட்டோ சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூரிய ஆயுதமொன்றினால் இளைஞர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞர், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கொழும்பு 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். ஓட்டோ சாரதி தலைமறைவாகி உள்ள நிலையில், அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளையில் பாடசாலை மாணவி கோடரியால் தாக்கிக் கொலை .

படம்
பதுளையில் பாடசாலை மாணவி கோடரியால் தாக்கி கொலை  பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, இன்று பகல் மாணவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாணவியின் சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹாலி எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.