இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சங்கானை மண்டிகைகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

படம்
குறித்த நபர் பஸ் நடத்துனராக செயற்படுவதாகவும். கடந்த சில நாட்களிற்கு முன் காணாமல் போய்யுள்ளதாகவும் அறியமுடிகிறது. இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலதிக விபரங்கள் 👇👇👇👇👇 சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது. மாதகல் - யாழ்ப்பாணம் சிற்றுந்து சாரதியும் பேருந்து உரிமையாளருமான, கடற்கரை வீதி மாதகலை சேர்ந்த குணபாலசிங்கம் கடம்பகுமார் (வயது 42) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த அவரது சடலம் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

🔴முதலைகளை பிடிக்க கொழும்பை சுற்றி பொறிகள்🐊

படம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்( Sri Lanka Rupavahini Corporation ) புதிய தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

படம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்( Sri Lanka Rupavahini Corporation )  புதிய தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை தேசிய நூலகத்தின் ( National Library of Sri Lanka) தலைவராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. சொனால குணவர்தன இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். அவர் கொழும்பு றோயல் கல்லூரியின் ( Royal College) பழைய மாணவரும் கொழும்பு பல்கலைக்கழக( University of Colombo) சட்ட பீடத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றவருமாவார். சீனாவின் ஷென்யாங் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ( Shenyang Aerospace University) வணிக முகாமைத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் நிர்வாக நிலை பதவிகளை வகித்துள்ளார் ... இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இளைய தலைவராக சொனால குணவர்தன வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்

அதிவுயர் அபாயத்தில் பத்திரிகை துறை...

படம்
அதிவுயர் அபாயத்தில் பத்திரிகை துறை... செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். இதன்படி டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனால், செய்தித்தாள்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன், பத்திரிக்கை தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மூதூர் பட்டினத்தில் பகுதியில் கோர விபத்து! - 26 பேர் படுகாயம்.

படம்
அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து மூதூர் பட்டித்திடலில் கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ! இன்று காலை அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கனரக வாகனத்துடன் (ஆளடியான்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இச்சம்பவம் இன்று காலை யில் திருகோணமலை மூதூர் பட்டியலில் என்னும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் திருக்கோணமலையில்..!!!

படம்
வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் திருக்கோணமலையில்..!!! வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் ஒன்று (Foreign Ministry – Regional Consular Office) திருக்கோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. அதாவது வெளிநாடுகளுக்கு செல்ல வீசா அனுமதியை பெறும்பொருட்டு தூதரகங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் வெளிநாட்டு அமைச்சில் சான்றுறுதிப்படுத்த (Document Attestation) வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை திருக்கோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் செய்துகொள்ள முடியும். அதாவது பேச்சுவழக்கில் ‘Foreign Ministry seal அடித்தல்’ என்று சொல்லப்படும் ஆவண சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் நிர்கதியான நிலையில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவரல், வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்களை கொண்டுவருதல், வெளிநாடு ஒன்றில் இருந்து வரவேண்டிய நஷ்டஈடு மற்றும் பெறுவனவுகளை பெறல் போன்ற சேவைகளை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை. அனைத்துவிடயங்...

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

படம்
கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார். முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இதேவேளை, ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் உல்லாச நடைபாதை சில தினங்களுக்கு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகாத்திடலில் ஜனாதிபதி செயலத்திற்கு எதிரில் உள்ள முகப்பின் ஊடாக இதற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.