இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்?

படம்
யாழில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்? யாழ்.மாவட்டத்திற்கு மேல் இன்று சனிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்க உள்ள நிலையில் மாவட்டத்தில் வெப்பநிலை 37 பாகையைத் தாண்டி அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நல்லூர் மற்றும் மிருசுவில் பகுதிகளுக்கு மேல் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில் இப்பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகலாம் என இலங்கை வளிமண்டலத் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய வானிலை அதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம்கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. சூரியனின் நீள் வட்டப்பாதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் தென் துருவத்தில் இருந்து வட துருவம் நோக்கி சூரியன் உச்சம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. அம்பாந்தோட்டையில் ஆரம்பித்து கடந்த புதன்கிழமை அனுராதபுரம் மன்னார் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுத்த நிலையில் தொடர்ச்சியாக நகர்வடைந்து முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நேற்று உச்சம் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று சனிக்க...

விஞ்ஞான பாட ஆசிரியர் வீ. பரனீதரன் பதுளையில் ஏற்பட்ட கார் விபத்தில் பலி!!

படம்
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 ப...

விபத்தில் சிக்கி உயிரிழந்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன!

படம்
விபத்தில் சிக்கி உயிரிழந்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொது மயானத்துக்கு முன்பாக இன்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன, பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலன்னறுவையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பியசேன அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலசேற்றுப் பகுதி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது..!

படம்
கண்டி, அலவத்துகொட  பிரதேசத்தில் உள்ள வயல் நிலசேற்றுப்  பகுதி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில்  இளம் பெண்ணொருவரின் சடலம்   கண்டெடுக்கப்பட்டுள்ளது..! (25) வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல் வீட்டிலிருந்து சுமார்  100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் புதைக்கப்பட்டுள்ளது. அலாவத்துகொட விளான பல்லேகம அல்லேகடே பகுதியில் வசிக்கும் தனுக வதுவந்தி ஜயதிலக்க என்ற (25) வயதுடைய திருமணமான பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு கிராமத்தில் உள்ள மரண வீட்டிற்கு சென்று திரும்பிய போது மனைவி வீட்டில் இல்லை எனவும் கணவர் குழந்தைகள் # இல்லை தாங்கள் தனியாக வீட்டில் வசித்து வருவதாக பொலிசாரியிடம் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து  இந்த கொடூர கொலை சம்பவதில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை விசாரித்து வருகிறார்கள் எனவே சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  அலவத்துகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரயில் கழிவறையிலிருந்து சிசு மீட்பு; தாயும் தந்தையும் கைது!

படம்
ரயில் கழிவறையிலிருந்து சிசு மீட்பு; தாயும் தந்தையும் கைது கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் கழிவறையிலிருந்து சிசு ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டிருந்தது அந்த சிசுவின் தாயும் தந்தையும் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  25 வயதான தாய் பண்டாரவளையிலும் 26 வயதான தந்தை கொஸ்லந்தையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மிகப் பெரும் பயணிகள் கப்பலான பிரின்சஸ் குரூஸ் 1,800 பயணிகளுடன் இலங்கை வந்துள்ளது.

படம்
மிகப் பெரும் பயணிகள் கப்பலான பிரின்சஸ் குரூஸ் 1,800 பயணிகளுடன் இலங்கை வந்துள்ளது.   1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிய கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும், கப்பல் இன்று இரவு துபாய்க்கு புறப்பட உள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி, 140க்கும் மேற்பட்டோர் காயம்

படம்
பங்களாதேஷ் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி, 140க்கும் மேற்பட்டோர் காயம் பங்களாதேஷ் டாக்காவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் செறிந்து வாழும் பகுதிக்கு அருகாமையில் உள்ள 07 மாடிக் கட்டிடத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு மாடிகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடித்ததை அடுத்து 200 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 11 தீயணைப்பு பிரிவுகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷில் பயங்கர தீ விபத்து12000 அகதி குடியிருப்புகள் நாசம்.

படம்
பங்களாதேஷில் பயங்கர தீ விபத்து 12000 அகதி குடியிருப்புகள் நாசம் பங்களாதேஷில், மியன்மாரின் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த முகாமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 2,000 குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன.  இதனால் சுமார் 12,000 பேர் தங்குமிடங்களை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்டுபலோங் நகரிலுள்ள அகதிகள் முகாமில்  நேற்று பிற்பகல் இத்தீ பரவ ஆரம்பித்தது.  இத்தீயினால் 2000 குடியிருப்புகள் தீக்கிரையாகி அழிந்துள்ளதாகவும், 12,000 பேர் தங்குமிடங்களை இழந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பங்களாதேஷின் அகதிகள் ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன் குறைந்தபட்சம் 35 பள்ளிவாசல்கள், 21 கற்கை நிலையங்களும் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார். 2021 ஜனவரி முதல் 2022 டிசெம்பர் வரை ரோஹிங்யா அதிகள் முகாமில் 222 தீப்பரவல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பங்களாதேஷ் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இவற்றில் 60 சம்பவங்களில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருந்ததாகவும் அவ்வமைச்சு தெரிவித்திருந்தது.  

செயற்திட்ட உதவியாளர்கள் [PROJECT ASSISTANTS] ஆகிய எமக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்?

படம்
செயற்திட்ட உதவியாளர்கள் [PROJECT ASSISTANTS] ஆகிய எமக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்? "යහපාලන සමයේ බඳවා ගැනීමට නිර්දේශ කළ පුහුණු ව්‍යාපෘති සහයකයින්ට මොකද වුණේ?" What happened to the Trainee Project Assistant recruitments which planned in Yahapalana government  During the yahapalana government time there was programme to recruit 7500 trainee project assistants. Though the interviews 6547 have been selected ,Due to the Elections the appointment's were  temporarily  halted. The Election commission has announced after the Presidential Election the appointments could be given. Mr Premadasa questioned the progress of those appointments . தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குங்கள்   நாடு முழுவதும் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பிரதமரின் அலரி மாளிகையில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம் பெற்று புரட்டாதி மாதம் 16ம் திகதி (2019.09.16) அகில இலங்கை ரீதியாக பயிலுனர் செய...

நல்லாட்சியின் போது ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்களுக்கு என்ன நடந்தது? -சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

படம்
நல்லாட்சியின் போது ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிலுநர் உதவியாளர்களுக்கு என்ன நடந்தது?" கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 7,500 பேரை பயிலுநர் திட்ட உதவியாளர்களாக நியமிக்கும் திட்டத்தை ஆரம்பித்ததாகவும்,இதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் 6,547 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் எனவும்,அப்போது தேர்தல் அறிவிப்பு வெளியானதால்,தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும்,ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில்,மீண்டும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது நிலையில், அதன் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். "යහපාලන සමයේ බඳවා ගැනීමට නිර්දේශ කළ පුහුණු ව්‍යාපෘති සහයකයින්ට මොකද වුණේ?" What happened to the Trainee Project Assistant recruitments which planned in Yahapalana government ? During the yahapalana government time there was programme to recruit 7500 trainee project assistants. Though the interviews 6547 have been selected ...

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு.

படம்
கொழும்பு கடவத்தை வெளிவட்ட வீதியில்  16 ஆம் கிலோமீற்றர் சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணித்த லொறியுடன் பின்னால் வேகமாக பயணித்த கார் மோதியதில் கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.  டைல்ஸ் ஏற்றப்பட்ட லொறி மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே திசையில் பின்னால் வந்த சொகுசு கார் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை பகுதியை  சேர்ந்த கிதானி மானெல் பிரியந்தி (வயது 47) என்ற ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியராவர்.    லொறி மீது கார் மோதியதால் கார் மோசமாக சேதமடைந்ததுடன் காரின் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கார் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள்......!

படம்
தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள்......! தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி!

படம்
கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி! கொழும்பில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரதி ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காரொன்றில் சாரதியொருவர் காத்திருந்துள்ளார். இந்நிலையில், குறித்த கார் தரித்து நின்ற பகுதியில் கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இதன்போது கட்டிட நிர்மாணப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் குழாய்யொன்று மேலிருந்து கீழ்நோக்கி காரின் மீது வீழந்துள்ளதில் காரின் முன்பக்க கண்ணாடியை துழைத்துக்கொண்டு சாரதியின் இருக்கையை நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!!

படம்
எரிபொருளுக்காக காத்திருந்த  வாகனங்களை சேதப்படுத்திய காட்டு  யானைகள்!! மட்டக்களப்பு - வெல்லாவெளி  பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக  வரிசையில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை காட்டு யானைகள் இன்று (29) அதிகாலை  வேளையில்  சேதமாக்கியுள்ளது. குறித்த யானை தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு எற்படாத போதும்  வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் வண்டிகளில் இரு வண்டிகள் முழுமையாகவும் ஏனைய வண்டிகள் பகுதி அளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு...

படம்
இந்திய பழங்குடியினத்தைத் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானார்! ------------------------------------------------------------------------- இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு (Draupadi Murmu) தேர்வானார்.  இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரைத்  தேர்வு செய்வதற்காக ஜூலை 18ம் நாள் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், பெரும்பாண்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவி என்ற பெருமையை பெற்று உள்ளார். ஓடிசா மாநிலத்தின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் பிறந்த திரௌபதி முர்மு, இருபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் செயற்பட்டுவரும் இவர், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண...

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

படம்
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார் இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி

படம்
அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பபாடசாலைமாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். பின்னர் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐந்து முதல் 11 வயது மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் துப்பாக்கி பிரயோகம் வழமைக்கு மாறான விடயம் என்பதால் இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி பிரயோகம் ஆரம்பித்ததும் அருகிலிருந்த அமெரிக்க எல்லை காவல்படையினர் அந்த பகுதிக்கு விரைந்து அந்த நபரை சுட்டுக்கொன்றனர் என ஏபி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நபர் பாடசாலைமீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் கைத்துப்பாக்கி மற்றும்  ஏஆர்15 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் தனியாக இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையில் ...

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்
பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த  பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது. உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 🚨யாழ் பல்கலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில் யாழ் பல்கலையில் இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவி தனுஜா என்பவர் சற்றுமுன்னர் யாழ்பாண பலகலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  வீட்டிலிருந்து பலகலைக்கழகம் செல்வதாக கூறி யாழ்ப்பணம் வந்த குறித்த மாணவி தனது அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு காற்றாடியில் துணி மாட்டி தற்கொலை செய்துள்ளார...

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படம்
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய ரயில்  Alawwa ரயில் நிலையத்துக்கு அண்மையில் Gorokgasdeniya  உள்ள வீதி புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் லொறியின்  சாரதி படுகாயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.